
முத்திரச்சந்தி கருப்பர் ஆலயம் கட்டிட பூமி பூஜை
விஸ்வகர்மா சமூகத்தவருடன் கரம் கொடுத்த பாளையநாட்டு அன்னங்கோட்டை அம்பலங்கள்
மணக்குடி ; பள்ளத்தூர் ; பாலையூர் ; கண்டனூர் ; வடகுடி ; கொத்தமங்கலம் ; நெடுங்குடி ஆகிய ஊர்களைச்சார்ந்த விஸ்வகர்ம சமுகத்தவர்களுக்கு உரித்தான சாக்கோட்டையில் உள்ள முத்திரச்சந்தி கறுப்பர் ஆலயம் கட்டிடம் வெகுநாட்களாக அனுமதியின்றி புனரமைப்பு செய்யாமல் இருந்தது.
அதனை தொடர்ந்து உரிமையை மீட்டெடுக்க எடுத்துரைத்த ஏழூர் விஸ்வகர்மா மக்களின் வேண்டுதலுக்கேற்ப
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் ஆழுமைக்குட்பட்ட பாலைய நாட்டு சேகரத்தில் வரும் அன்னங்க்கோட்டை (பட்டம் )அம்பலங்களான
திரு கா . நாராயணன் அவர்கள் - பாலையூர் தமிழ்நாடு தேவர் பேரவை துணைத்தலைவர்
திரு பெரி ராம்குமார் அவர்கள் பள்ளத்தூர் நாம்வல்லம்பர் தலைமை ஒருங்கிணைப்பாளர் இவர்கள் இணைந்து
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீ ராமானுஜ தாஸ்ய மேதகு ராணி சாஹியா ஸ்ரீமத் முத்து விஜய ரெகுநாத கௌரி வல்லப மதுராந்தக நாச்சியார் அவர்களை நேரில் சந்தித்து அனுமதியை பெற்றனர்
இதனை தொடர்ந்து 3 / 11 / 2025 திங்கள் அன்று முத்திரச்சந்தி கருப்பர் பூமி பூஜை நடைபெற்றது
இதில் சிவகங்கை சமஸ்தானம் சூப்பிரண்ட்டுகள் ஏழூர் விஸ்வகர்மா சமுதாய மக்கள் சாமியாடிகள் கலந்துகொண்டனர்
திரு ரவி மற்றும் திரு ராம்குமார் அவர்கள் காளாஞ்சி மரியாதைகளை பெற்றுக்கொன்றனர்
இதுபோன்ற சமூக ஒற்றுமையை பறைசாற்றும் நிகழ்வுகள் இறையால் நடிப்பெறுவது வரவேற்க்க தக்கதாகும்
வாழ்த்துக்கள் ! வாழ்க ! வளர்க !
Event Details
- 2025-11-03
- அன்னங்கோட்டை
- info@naamvallambar.com
- +91 78458 94845