
600 வருட பழமை வாய்ந்த லிங்கத்திற்கு நாட்டார் பெருமக்களின் அன்னாபிஷேக விழா
சிவ பெருமானுக்கு எத்தனை - எத்தனையோ பொருட்களால் அபிஷேகம் செய்தாலும், வருடத்தில் ஐப்பசி பௌர்ணமி நாளில் மட்டும் லிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உயர்ந்த பலனை அளிக்கும்.
சிவபெருமானுக்கு, நடத்தப்படும் அபிஷேகங்கள் அனைத்தும் 24 நிமிடங்களில் நிறைவு செய்ய வேண்டும். ஆனால் ஐப்பசி பெளர்ணமி அன்று நடத்தப்படும் அன்னாபிஷேகம் மட்டுமே ஒன்றரை மணி நேரம் சிவ பெருமானின் திருமேனியை அலங்கரிக்கும்.
சிவலிங்கம் மீது அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கத்திற்கு சமமாக கருதப்படுகிறது. எனவேதான் சோற்றால் அபிஷேகம் செய்யப்பட்ட லிங்கத்தை தரிசனம் செய்தால், பல ஜென்ம பாவங்கள் நிவர்த்தி ஆகுமெனக் கூறப்படுகிறது.
இப்பேற்பட்ட சிறப்பான அபிஷேகத்தை அமராவதி நாட்டு நாட்டார் பெருமக்களான - சேது ரெகுநாத பட்டினத்து நாட்டார்களால் நிர்வகிக்கப்படும் 600 வருட பாரம்பரியமிக்க SR பட்டினம் எனும் சேது ரெகுநாத பட்டினத்தில் அமைத்திருக்கும் ஸ்ரீ காளகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் நாட்டார் பெருமக்கள் சிறப்பாக கலந்துகொண்டு திருவாசகம் ஓதப்பெற்று , அபிஷேகம் மற்றும் அன்னதானம் மேற்கொண்டு இறைவனை தரிசித்தனர்.
நாட்டார் அழைப்பை ஏற்று நாம்வல்லம்பர் அமைப்பினர் விழாவில் கலந்துகொண்டு இறைஅருள் பெற்றனர்.
வாழ்க தாயகம் ! வளர்க வல்லம்பர் சமுதாயம் !
Event Details
- 2025-11-01
- சேது ரெகுநாத பட்டினம்
- info@naamvallambar.com
- +91 78458 94845